முகப்பு       பொது வினாக்கள்       Help       விகித கணக்கீடு       e-Receipt       e-Invoice       உட்புகல்       

Help

  • புதிய பயனாளர்கள் இந்த இணையதளம் மூலமாக பதிவு செய்து நிலுவையில் உள்ள மின்கட்டணத் தொகையை விசா/மாஸ்டர் கடன் அட்டை (அல்லது) பணம் அட்டை (அல்லது) இணையதள வங்கி மூலமாக செலுத்தலாம். இதற்கு பயனாளர்கள் ஒரு முறை தங்களது சரியான மின் இணைப்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

  • சரியான மின் இணைப்பு எண், மின்னஞ்சல் முகவரி அளிப்பதன் மூலம் தனித்தன்மை உடைய பயனாளர் பெயர தேர்வு செய்ய முடியும். இந்த பயனாளர் பெயரைக் கொண்டு இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியும்.பதிவு செய்து முடித்தவுடன், தாங்கள் அளித்த மின்னஞ்சல் சரியானது என்று உறுதி செய்ய ஒரு மின்னஞ்சல் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் உள்ள தொடர்பை உபயோகித்தால், இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்தும் நுழை வாயிலை சென்றடையலாம்.

  • தாங்கள் பதிவு செய்த பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி நிலுவைத் தொகை ஏதேனும் இருப்பின் அதை தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்தலாம்.

  • தற்போதைய மின் கட்டண நிலுவைத்தொகையை, தாங்கள் நுகர்வோர் எண்ணை தேர்வு செய்து செலுத்தலாம்

  • ஒரு பயனீட்டாளர், 24 பயனீட்டாளர்கள் எண்ணை 'பயனாளர் சேர்க்க' என்ற தொடர்பின் மூலமாக சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாக தேர்ந்தெடுத்தே கட்டணம் செலுத்த வேண்டும்.

  • மின்-ரசீதை(e-receipt) "ரசீது விவரங்கள்" என்ற தொடர்பில் சென்று அச்சுபிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

  • "சுயவிவர மாற்றல்" மூலமாக தங்களின் மின்னஞ்சல் பெயர் மற்றும் இதர விவரங்களை மாற்றிக் கொள்ளலாம்.

  • பாதுகாப்பு குறித்து தங்களின் கடவுச் சொல்லை அடிக்கடி "கடவுச் சொல் மாற்றல்" என்ற தொடர்பை உபயோகித்து மாற்றிக் கொள்ளலாம்.

  • கடவுச் சொல் மறந்து விட்டால் "கடவுச் சொல் மறந்தால்" என்ற தொடர்பை உபயோகித்து தங்களின் கடவுச் சொல்லை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

காப்புரிமை © 2011.